Monday 24 June 2013

ஒரு எச்சரிக்கை
நம் அன்றாட உணவில் தினசரி மணத்திற்காகவும், மருந்தாகவும் (லவங்க)பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரம் மசாலா செய்வதற்கு இது தான் பிரதானமானது. இதில் நாம் உபயோகப்படுத்தும் லவங்க பட்டையில் போலி (போலி பட்டை என்று சொல்வதை விட விஷப் பட்டை என்றே அழைக்கலாம்) பட்டைதான் அதிகம் உபயோகத்தில் உள்ளது. அதைப் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல்.

ஒரிஜினல் பட்டையை ஆங்கிலத்தில் CEYLON CINNAMON என்று கூறுவார்கள். இது உணவிற்காக பயன்படுவது மட்டும் அல்லாமல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்காக சித்த/ஆயுர்வேதம் மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டு  பரவலாக சர்க்கரை வியாதியினரால் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பட்டையின் வருடாந்திர உபயோகம் 12000 டன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறு என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் வாதிடுகிறார்கள். காரணம், கான்பூரில் உள்ள வியாபாரி ஒருவரால் மட்டுமே வருடம் ஒன்றிற்கு 9500 டன் போலி பட்டை இறக்குமதி செய்யப்படுகிறது என்கிற தகவல் உள்ளது.

கேரளாவில் கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களில் வருடம் ஒன்றுக்கு சுமார் 200 டன் பட்டை உற்பத்தி seyyaஆகிறது. (போலி பட்டையின் இறக்குமதி அதிகமாக உள்ளதால் ஒரிஜினல் பட்டை உற்பத்தியின் பரப்பளவு மிகவும் குறந்து வருகிறது. காரணம் உரிய விலை கிடைப்பதில்லை) பெரும்பாலும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டை தான் ஒரிஜினல். ஒரு கிலோ ஒரிஜினல் க பட்டையின் தோராயமான இறக்குமதி விலை ரூ.200/-

போலி (லவங்க)பட்டை என்பதை ஆங்கிலத்தில் CASSIA CINNAMON என்று கூறப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிலோன் (லவங்க)பட்டையை போல் இருக்கும். இந்த போலி பட்டை என்பது சீனா, இந்தோனேஷியா, வியட்னாம், போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனுடைய இறக்குமதி விலை ஒரு கிலோ ரூ.35/-தான்.

இந்தபட்டையில் COUMARIN என்ற கெமிக்கல் உள்ளது. இந்த COUMARIN கெமிக்கலானது RODANT என்று சொல்லப்படும் எலி மற்றும் கரப்பான் பூச்சி விஷம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விஷத்தன்மையை அறிந்து இதன் உபயோகத்தை ஐரோப்பிய நாடுகளில் தடை செய்து விட்டார்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் எலி விஷம் தயாரிப்பதற்க்காக மற்றும் சிறப்பு அனுமதியின் பேரில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

நம் நாட்டில் இந்த போலி பட்டையின் இறக்குமதியை தடை செய்யக் கோரி (லவங்க)பட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்பைஸ்ஸ் போர்ட் (SPICES BOARD) மத்திய அரசிடம் 2007ம் ஆண்டிலிருந்து போராடி வந்தது. நீண்ட போராட்டதிற்கு பின்பு தற்போது போலி பட்டையை (CASSIA CINNAMON) RESTICTED ITEM என்று இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளார்கள்.

இது போதாதா நம்மவர்களுக்கு?

நம் நாட்டில் வருடம் ஒன்றிற்கு போலி பட்டையானது பல ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனுடைய இறக்குமதி விலை ஒரு கிலோ ரூ.35/-தான். இந்த போலி பட்டையானது கிலோ ஒன்று ரூ.150/- முதல் ரூ.600/- வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150/-க்கு விற்பனை செய்தாலே சுமார் 300% லாபம் கிடைக்கிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால் தம்மால் விற்பனை செய்யப்படுவது போலி பட்டைதான் என்பது பெரும்பாலான விற்பனையாளர்களுக்கு தெரிவதில்லை.

ஒரிஜினலும், போலியும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தெரியும், மேலும் இதன் வாசனையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்..

போலி பட்டை என்று எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது.

ஒரிஜினல் சிலோன் பட்டை மிகவும் மெலிதாக இருக்கும். அதை பென்சில் அல்லது பேனா போன்ற உருண்டையான பொருளில் சுற்றி விடலாம். இதன் மணம் நறுமணமாக (DELICATE FLAVOUR) இருக்கும். இதன் நிறம்  TAN COLOUR ல் இருக்கும். இதை பொடி செய்தால் நன்றாக நைஸாக வரும்.

போலி பட்டையானது மெலிதாக இருக்காது. பல அடுக்குகள் உடையதாகவும், வெளியில் கரடு முரடாகவும் இருக்கும். உள் பகுதி மட்டும் மெலிதாக இருக்கும்.  இதன் மணம் காட்டமாக (INTENSE AROMA) இருக்கும். இதன் நிறம் REDDISH BROWNல் இருக்கும். பொடி செய்தால் கொர கொரப்பாக (COARSE) வரும். நைஸாக இருக்காது.

இந்த போலி பட்டையினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

போலி பட்டையை உபயோகப்படுத்தினால் முதலில் இது ஈரலைத்தான் பாதிக்கும். குடல் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்புகள் ஏற்ப்படும் வாய்ப்புகளும் உண்டு. அதன் காரணமாக மஞ்சள் காமாலை போன்ற பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பட்டை வாங்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். மேலும் சர்க்கரை நோயாளிகள் இதை பாவிக்கும் போது நாம் உண்பது உண்மையான பட்டையின் பொடிதானா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உண்மை தெரியாமல் விஷத்தை உண்ணாதீர்கள்.

இந்த விபரத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி (SHARE செய்யும்படி) அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த போலி பட்டை சம்பந்தமாக மேலும் விபரம் தேவைப்பட்டால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பினால் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்:

என் மின் அஞ்சல் முகவரி: pudukottaisadiq@gmail.com

(ஆதாரம்: DOWN TO EARTH  சுற்று சூழல் இதழ்)



6 comments:

  1. ஆத்தாடி இதுவும் போலியா

    ReplyDelete
  2. இப்படி பணம் சம்பாதிக்கும் நாய் கள் நாளை இவர்கள் சந்ததிகள் அழிந்து போவது பற்றி சிந்திக்க மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்ல லவங்கம் கிடைக்கும் இடம் பற்றி தெரிவிக்கவேண்டுறேன்.

      Delete
  3. நல்ல லவங்கம் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் தெரிவிக்கவேண்டுறேன்

    ReplyDelete
  4. பாேலி என்று சாெல்ல தெரிந்த உங்களுக்கு..எங்கு ஒரிஜினல் கிடைக்கும் னு சாெல்லதெரியாதா?..எத்தனை பேர் கேட்கிறார்கள்..பாருங்கள்..இப்படி பயமுருத்தியே எதையும் செய்ய விடாதிர்கள்....

    ReplyDelete
  5. ோலி பட்டை மற்றும் உண்மையான பட்டை எப்படி இருக்கும். படத்தை
    பே ாடுங்கள்

    ReplyDelete